இந்தியா, ஏப்ரல் 6 -- "இவ்வளவு கொடுத்தும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்" என திமுகவை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்து உள்ளார்.

ராமேஸ்வரத்தில் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மூன்று மடங்கு அதிக நிதியை வழங்கியிருந்தாலும், சிலர் இன்னும் அழுது கொண்டே இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். "அவர்களால் அழ மட்டுமே முடியும், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்," என்று அவர் கூறினார்.

வளர்ச்சி அடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும், தமிழ்நாட்டின் வல்லமை உயரும் அளவுக்கு பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், 2014-க்கு முந்தைய திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சியை விட மத்திய அரசு மூ...