இந்தியா, மார்ச் 31 -- வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார்.

ஏப்ரல் 5ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மறுநாள் ஏப்ரல் 6 அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். நேரடியாக ராமநாதபுரத்திற்கு வரும் அவர், பாம்பனில் புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைக்கிறார். மேலும் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.

பின்னர் ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, மதுரை வழியாக டெல்லி திரும்புகிறார். 2024 லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமரின் முதல் தமிழக வருகை இதுவாகும்.

மேலும் படிக்க:- 'Ghibli ட்ரண்டில் இணைந்தார் எடப்பாடி பழனிச...