இந்தியா, ஏப்ரல் 6 -- "ராமேஸ்வரம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தென் மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என உறுதியளிக்க வேண்டும்" என நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதில், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் சதியை முதன்முதலில் உணர்ந்து, அதற்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதாகவும், ...