இந்தியா, மார்ச் 25 -- தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்றைய கூட்டத்தொடரில் கேள்வி நேரம் முடிந்ததும் இருமொழிக் கொள்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர். இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என்பது ...