இந்தியா, ஜனவரி 28 -- சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெறும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை இல்லை, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இட்ட பணியை தட்டாமல் செய்து முடிப்பதுதான் தன்னுடைய ஒரே வேலை என்று வாழ்ந்த ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு கழக அரசு மணிமண்டபம் அமைப்பதும், அதை நான் திறந்து வைப்பதும் எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை!

அடுத்து, 21 சமூகநீதிப் போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்ட...