இந்தியா, பிப்ரவரி 7 -- 'திருநெல்வேலி அல்வா என்றால் உலக ஃபேமஸ் ஆனா இப்போ மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தர அல்வா தான் அதைவிட ஃபேமஸ்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்புகளில் இருந்து மீள ஒன்றிய அரசிடம் நிதி கேட்டோம். இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தாங்க, ஆனால் இடைக்கால நிதி உதவி கூட கிடைக்கவில்லை.

நம்முடைய நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக்கூடாது. அவருக்கு உண்மை தெரியும். ஆனால் அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப...