இந்தியா, ஜனவரி 9 -- ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யு.ஜி.சி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்து தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.தீர்மானத்தின் மீது பேசிய அவர், "பல்கலைக்கழகங்களையும் சிதைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகத்தான் முடியும். அதற்காகத்தான் இப்படிச் செய்யப் போகிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

துணைவேந்தரைத் தேர்...