Hyderabad, பிப்ரவரி 20 -- காதலர் தின எதிர்ப்பு வாரத்தின் ஆறாவது நாளான இன்று (20/02/2025) மிஸ்ஸிங் நாள் எனும் காணாமல் போன நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் காதலர் தினத்திற்கு எதிராக காதலர் தின எதிர்ப்பு வாரம் தொடங்குகிறது. இது பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21 வரை நீடிக்கும் ஏழு நாட்கள் அடங்கிய கொண்டாட்டம் ஆகும். இந்த வாரம் காதலுக்கு எதிரான கொண்டாட்டங்கள் நடக்கின்றன. காதலர் தினத்திற்கு அடுத்த நாள் காதலர் எதிர்ப்பு வாரம் தொடங்குகிறது.

இது ஸ்லாப் டே, கிக் டே, பெர்ஃப்யூம் டே, ஃப்ளர்ட் டே, மிஸ்ஸிங் டே மற்றும் பிரேக்அப் டே எனத் தொடர்ந்து மொத்தம் ஏழு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இது மேற்கத்திய நாட்டில் தனிச்சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், இந்தியாவில் ஒரு சிலர் இந்த தினத்தை கடைபிடிக்கின்றனர். காதலில் ஏமாற்றப்பட்டவர்கள், கா...