இந்தியா, பிப்ரவரி 15 -- உடலில் செரிமான பிரச்சனைகளுக்கு புதினா பெரும் அளவில் உதவும். இத்தகைய புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத மறுத்துவத்திலும் புதினா இலையின் பயன்களை பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் நாம் தினமும் தேநீர் குடிக்கும் போது அதில் புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம். இருப்பினும் இதில் குறைந்த அளவே புதினவை சேர்க்க முடியும். அடிக்கடி புதினாவை உணவில் சேர்த்துக் கொள்ள சிறந்த வழி என்றால் அதனை சட்னியாக சமைத்து பயன்படுத்துவதே. இவ்வாறு பயன்படுத்தும் போது இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சூடான சாதம் என பல தரப்பட்ட உணவுகளோடு சேர்த்து சாப்பிட முடியும். அதிலும் புதினாவுடன் சேர்த்து கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து சட்னி செய்து சமைத்து சாப்பிட்டால் சுவையும் அதிகரிக்கும். சுவையான புதினா மல்லி சட்னி செய்வது எப்படி என்பதை ...