இந்தியா, பிப்ரவரி 23 -- கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு ஆகிய ஒன்பது தானியங்களைக் கொண்ட தொகுப்பே நவதானியம். இவை இந்திய உணவில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள். இந்த நவ தானியம் தமிழ்நாடு மட்டும் அல்லது பல மாநிலங்களில் முக்கியமான உணவு பொருளாக இருந்து வருகிறது. இந்திய பாரம்பரிய மருத்துவத்திலும் நவ தானியம் குறித்து பல பலன்கள் கூறப்பட்டுள்ளது. இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் நமக்கு வித்தியாசமான சமையல் செய்வதற்கு தெரிவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்த ஒரு உணவு ரெசிபியைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். நவ தானியங்களை வைத்து சுவையான மற்றும் சூடான தோசை செய்வது எப்படி என்பதை இங்கு கொடுத்துள்ளோம். இதனை பின்பற்றி நீங்களும் உங...