இந்தியா, ஜனவரி 31 -- இரண்டு மாத இடைவெளிக்குள் மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு நாளை முதல் அமுலுக்கு வருகிறது. மக்கள் நலனிற்கு எதிராக அடிக்கடி தன்னிச்சையாக பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் தனியார் பால் நிறுவனங்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நிறுவனம் கடந்த வாரம் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்திருக்கும் தருணத்தில் தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சக்ரா, அர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் சத்தமின்றி ஜனவரி மாதம் ஒவ்வொன்றாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர...