இந்தியா, பிப்ரவரி 18 -- தமிழ் சினிமாவை 60 மற்றும் 70களில் மூன்று பேர் ஆண்டு வந்தனர் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன். இதில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் எப்படி போட்டி போட்டு விளாசிக் கொள்கிறார்களோ அதே போல அப்போதும் இருந்தது.

விசித்திரமான கதாபாத்திரங்களை விதவிதமாக ஒரு பக்கம் சிவாஜி நடித்துக் கொண்டிருக்க, ஆக்சன் திரைப்படங்களில் களமிறங்கி எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக இருந்தார். குடும்ப திரைப்படங்களில் முக்கியத்துவம் கொடுத்து ஒரு பக்கம் ஜெமினி கணேசன் நடித்து வந்திருந்தார்.

இவர்கள் ஒன்றிணைந்து நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயமாகும். உச்ச இடத்தைப் பிடித்த பிறகு அந்த இடத்தில் இருக்கக்கூடிய மற்றொரு நடிகர்களோடு நடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகு...