இந்தியா, மே 2 -- படையப்பா திரைப்படத்தில் ரஜினியுடன் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான அனுபவத்தை, பிரபல டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான மெட்டி ஒலி சாந்தி பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, " நான் ரஜினி சாருடன் நிறைய பாடல்களில் இணைந்து நடனமாடி இருக்கிறேன். பாட்ஷா திரைப்படத்தில் தான் முதன்முறையாக நான் அவருடன் இணைந்து ஆடினேன். அப்போது நான் அவரின் வெறித்தனமான ரசிகை என்பதை, ரஜினி சார் பாடலுக்கான ஒத்திகைக்கு வரும் முன்னரே, யாரோ அவரிடம் சொல்லிவிட்டார்கள்.

ஆகையால் நான் அவர் வந்தவுடன், அவரைக் கட்டிப்பிடித்து, அவரிடம் நான், அவரின் எப்பேர்பட்ட ரசிகை என்பதைச் சொன்னேன். அதைக்கேட்ட அவர், அப்படியா.அப்படியா. என்று சொல்லி, அவரும் என்னை கட்டி அணைத்துக் கொண்டார்.

நாங்கள் மிக மிக ஜாலியாக வேலை செய்த பாடல் என்றால், படையப்பா திரைப்படத்தில் 'சுத்தி ச...