இந்தியா, ஜனவரி 20 -- Mercury Transit: ஜோதிடத்தில் புதனுக்கு தனி இடம் உண்டு. புதன் புத்திசாலித்தனம், தர்க்கம், தகவல் தொடர்பு, கணிதம் மற்றும் நட்பின் கிரகம் என்று கூறப்படுகிறது. புதனை நவகிரகங்களில் இளவரசன் என்று கூறுகிறார்கள். புதன் சுபமாக இருக்கும்போது ஒருவனுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அதுவே, புதன் அமங்கலமாக இருக்கும்போது ஒருவர் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வரும் ஜனவரி 24, 2025 அன்று, புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மகர ராசியில் புதன் பகவான் நுழைவது, 12 ராசிகளிலும் எதிரொலிக்கும். மகர ராசியில் புதன் பகவான் நுழைவதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: புதன் பகவானின் பெயர்ச்சியால் மேஷ ராசியினர், முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். மனம் மகிழ்ச்...