இந்தியா, பிப்ரவரி 17 -- கிரகங்களின் அதிபதியான புதன் பகவான், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசி, இயக்கம் மற்றும் நிலையை மாற்றுகிறார். தற்போது, ​​சனியுடன் கும்ப ராசியில், புதன் அஸ்தமன நிலையில் உள்ளார். கடந்த ஜனவரி 20, 2025 அன்று அஸ்தமித்த புதன், பிப்ரவரி 22, 2025 அன்று மாலை 07:04 மணிக்கு மீண்டும் உதயமாகிறார்.

சுமார் 34 நாட்களுக்குப் பிறகு புதன் உதயமாகப் போகிறது. புதன் உதயத்தின் போது 12 ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டாலும், சில ராசியினர் நிதி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதன் கும்ப ராசியின் உதயம் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்

மேஷம்: புதன் மேஷ ராசிக்காரர்களின் வருமானம் மற்றும் லாப வீட்டில் புதன் உதயமாகிறார். எனவே, மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் அறிகு...