இந்தியா, மார்ச் 23 -- Mercury Retrograde: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனான புதன் பகவானின் இயக்கம் மற்றும் நிலை, 12 ராசிகளையும் பாதிக்கிறது. மீன ராசியில் புதன் பகவான் தற்போது நிலையாக அமர்ந்து இருக்கிறார்.

கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று இரவு 07:20 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 08, 2025 செவ்வாய்க்கிழமை காலை 05:04 மணி வரை புதன் பகவான் மீன ராசியில் பிற்போக்காக சஞ்சரிப்பார்.

புதன் பகவான் சுமார் 21 நாட்கள் மீன ராசியில் பிற்போக்காக சஞ்சரிக்கிறார். புதன் பகவான் வேலை, வியாபாரம், பேச்சு, தகவல் தொடர்பு மற்றும் திறன்களுக்கு எல்லாம் ஒரு காரணியாக விளங்குகிறார்.

சில ராசிக்காரர்கள் புதனின் நிலையற்ற தன்மையால் பயனடைவார்கள். சில ராசியினர் புதனின் ஆசீர்வாதத்துடன், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதனின் பிற்போக்கு நகர்வால் அதிர்ஷ்ட...