இந்தியா, ஜனவரி 28 -- Meenam Rasi: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்தவர். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சுக்கிர பகவான் ஜனவரி 28ஆம் தேதி அன்று அதாவது இன்று மீன ராசியில் புகுந்தார். இது குருபகவான் சொந்தமான ராசியாகும். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது அவரோடு சுக்கிரன் இணைந்து இருக்கிறார். சுக்கிரனின் மீன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போகின்ற...