இந்தியா, பிப்ரவரி 19 -- Actor Mayilsamy : நடிகர் மயில்சாமி சத்தியமங்கலம் பகுதியில் 1965ஆம் ஆண்டு, அக்டோபர் 2ஆம் தேதியில் பிறந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 1977-ல் சென்னைக்கு வந்த அவர் நடிகர் பாக்யராஜிடம் தன் மிமிக்ரி திறமையைக் காட்டி, தாவணிக் கனவுகள் திரைப்படத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமானார்.

அதன்பின் நடிகர் பிரபு, ரேவதி ஆகியோர் நடித்த கன்னிராசி திரைப்படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்தார் நடிகர் மயில்சாமி. இதனையடுத்து, அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசனின் நண்பராகவும், வெற்றிவிழா திரைப்படத்தில் குஷ்பூவின் சகோதரராகவும், மைக்கேல் மதன காமராஜனில் தீயணைப்பு வீரராகவும் நடித்து மெல்ல மெல்ல சினிமா வாய்ப்புகளைப் பெற்றார் நடிகர் மயில்சாமி.

1984-இல் நடிகர் பாக்யராஜ் நடித்த தாவணி கனவுகள் என்ற திரைப்படம் மூலம் திரையுலகுக...