இந்தியா, பிப்ரவரி 15 -- மயிலாடுறையில் கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனயை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் ஹரிசக்தி மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். சாராய வியாபாரி ராஜ்குமார், தங்கதுரை ஆகிய 2 பேர் கைதான நிலையில், மூவேந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல; முன் விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறே சம்பவத்திற்கு காரணம் என காவல்துறை கூறி உள்ளது. தினேஷ், மூவேந்தன் ஆகியோர் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்து உள்ளது. சம்பவ தினத்தன்று மூ...