இந்தியா, ஜனவரி 29 -- Mauni Amavasya 2025: நவகிரகங்களில் ஆடம்பர கிரகிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஜனவரி 28ஆம் தேதி அன்று சுக்கிரன் மீன ராசிக்கு சென்றால் இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும்.

மகா கும்பமேளாவில் மிகப்பெரிய நீராடலாக கருதப்படும் மௌனி அமாவாசை நீராடல் இன்று ஜனவரி 29ஆம் தேதி அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மௌனி அமாவாசை திருநாள் பலருக்கும் பயனுள்ள திருநாளாக அமையும்...