இந்தியா, மார்ச் 12 -- Masi Magam Festival 2025: மாசிமகம் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்ட வருகிறது. அந்த வகையில் பல்வேறு கோயில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த நாட்களில் மனிதர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் புனித நீராடலின் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருவதுதான் மாசி மாதம். இந்த மாதத்தில் பல சிறப்புகள் இருக்கின்றன. இந்த மாசி மாதத்தில் முதன்மையாக கருதப்படுவது மகா சிவராத்திரி திருநாள். அதற்குப் பிறகு மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுவது மாசி மகம்.

இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரம் திருநாள் தான் மாசி மகம் என கொண்டாடப்பட்டு வருகிறது. இது பல்வேறு விதமான ஆன்மீக சிறப்புகளை கொண்ட நாளாக திகழ்ந்து வருகின்றது. அனைவரது பாவங்களைப் போக்கி புண்ணிய பலன்களை கொடுக்கும் மாதமாக இந...