இந்தியா, பிப்ரவரி 18 -- காலை வேளையில் உணவு தயாரிப்பது என்பது வீட்டில் சமையல் செய்பவர்களுக்கு ஒரு பெரும் வேலையாக இருந்து வருகிறது. வேலையாட்கள் வைத்து சமையல் செய்யக்கூடிய வீடுகளில் கூட காலை உணவு சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்றே கூறலாம். ஏனென்றால் தினம் தோறும் இட்லி, தோசை என வழக்கமான உணவுகளை சாப்பிட்டு வீட்டில் உள்ளவர்கள் சலிப்படைந்து இருக்கலாம். எனவே அனைவரும் வித்தியாசமான உணவுகளை சாப்பிட விரும்புகின்றனர். நீங்களும் உங்கள் வீடுகளில் காலை வேளையில் வித்தியாசமான உணவை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை ஸ்பெஷலாக மாற்ற முடியும். அதுதான் மசாலா சப்பாத்தி, இவ்வாறு மசாலா சப்பாத்தி செய்து கொடுப்பது குழந்தைகளை குஷிப்படுத்தும். ஏனெனில் இதற்கு என தனியாக ...