இந்தியா, பிப்ரவரி 15 -- Marriage: கணவன்-மனைவி பிரச்னையில் யாரிடமும் கருத்து கேட்கக்கூடாது என்றும்; வார்த்தைகள் விடக்கூடாது எனவும் பாடகர் தம்பதிகளான அனிதா மற்றும் புஷ்பவனம் குப்புசாமி தம்பதியர் பேட்டியளித்துள்ளனர்.

இதுதொடர்பாக சினி உலகம் யூட்யூப் சேனலுக்கு புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினர் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

முதலில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இப்படி தான் நம்ம பாட்டி, தாத்தா எல்லாம் வாழ்ந்து இருக்காங்க. அது என்னன்னு தெரியல இந்த காலகட்டத்துல எல்லாம் 32 வருஷம் ஒன்றாக இருந்து இருக்கீங்களா, 32 ஆண்டுகள் இதே லவ்வோடு இருக்கீங்களா அப்படின்னு கேட்க ரொம்ப வியப்பாக இருக்கு. ஆனால், நம்ம மூதாதையர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்ந்து இருக்காங்க.

பொறுமை கிடையாது. காதலுக்கும் அஃபெக்சனுக்குமே வித்தியாசம் இருக்கு. காதல்ன...