இந்தியா, மார்ச் 21 -- தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை இரத்தமும், சதையுமாக காண்பித்து வருபவர் இயக்குநர் மாரிசெல்வராஜ். இவர் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், தனக்குள் வாசிப்பு ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினார்.

அவர் பேசும் போது, 'என்னை, என் வாழ்வை முழுவதுமாக மாற்றியது வாசிப்புதான். உங்களுக்கும் நான் அதைத்தான் சொல்கிறேன். எதையாவது வாசியுங்கள். இந்த வாசிப்பு உங்களுக்கு அனிச்சை செயலாக மாறும்பொழுது, உங்களுக்குள் இயல்பாகவே ஒரு மாற்றம் உருவாகும்.

மேலும் படிக்க | மாரிசெல்வராஜ்: 'என்ன பார்க்கதான் ஆள் இல்ல ஆனா..படிப்புதான் முக்கியம்னு சொல்லிக்கொடுத்துருக்கேன்' - மாரிசெல்வராஜ் பேட்டி

நீங்கள் வாசிக்கும் பொழுது உங்களுடைய பேச்சு மாறும். நீங்கள் வார்த்தைகளை பிரயோகிக்கும் முறை மாறும். நீங்கள் உங்கள் அண்ணனிடமோ, அம்மாவிடமோ, தங்கையிடம...