இந்தியா, மே 5 -- மனோரமா வாழ்க்கை கதையை பிரபல பத்திரிகையாளரான ராஜ கம்பீரன் ஜீவா சினிமாஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் பேசும் போது, " கோபி சாந்தாவின் அப்பா, திடீரென்று சித்தியை திருமணம் கொள்ள, இதில் கோபமான சாந்தாவின் அம்மா, குழந்தைகளை அழைத்துக்கொண்டு காரைக்குடி அருகே இருக்கக்கூடிய பள்ளத்தூர் என்ற ஊரிற்கு வந்து விடுகிறார்.

வீட்டில் கொடிய வறுமை. இதனால் கோபி சாந்தாவின் அம்மா, கோபியை, அருகில் உள்ள திரையரங்கில் இடைவேளையில் முறுக்கு விற்க அனுப்பினார். திரையரங்கில் அதிகப்படியான நேரம் செலவிட்ட சாந்தாவிற்கு, தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட பலர் பாடிய பாடல்கள் அனைத்தும் மனப்பாடமாக மாறிவிட்டது.

பாடல்கள் அனைத்தும் நன்றாக மனப்பாடம் ஆகிவிட்டதால், அவர் நன்றாக பாடவும் ஆரம்பித்துவிட்டார். இது பலரையும் வியப்பிற்குள்ளாக்கிய...