இந்தியா, மார்ச் 26 -- Manoj Bharathiraja: இயக்குநரும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மார்ச் 25 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் ரோபோ சங்கர் அவரது மனைவியுடன் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கர், தனக்கும் மனோஜிற்குமான உறவு குறித்தும் அவரது கடைசி ஆசை குறித்தும் பேசி நெகிழ்ந்துள்ளார்.

மனோஜ் பற்றிய பேசிய ரோபோ சங்கர், "மனோஜ் பாரதிராஜா சாரோட இழப்பு எங்களுக்கு மிகப் பெரியது. 48 வயசுல இறப்பா அப்படின்னு கேட்டப்போ எனக்கே பதறுது. நான் சென்னைக்கு 2000ல வரும் போது உலகத்திலேயே என்னோட முதல் ரசிகனா இருந்தது இவர் தான். எனக்கு போன் பண்ணி பாரதிராஜா சார் பையன் பேசுறன்னு சொல்லி ஒரு பெரிய ஆச்சரியத்த கொடுத்தாரு.

டேய் உலகத்துல யாரு கேட்டாலும் உனக்கு...