இந்தியா, மார்ச் 26 -- பிரபல இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி திரையுலகத்தினரிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், மனோஜ் பாரதிராஜாவும் அவரது மனைவியுமான நந்தனாவும் இணைந்து புதுயுகம் யூடியூப் சேனலுக்கு சில வருடங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியை நினைவு கூறலாம்.

அதில் மனோஜ் பேசும் போது, 'கல்யாணத்துக்கு முன்னர் இரண்டு வருடங்களாக நாங்கள் காதலித்து வந்தோம். அந்த காலங்களில் நாங்கள் பெரிதாக சந்தித்துக் கொண்டதே இல்லை. அத்தி பூத்தாற்போலத்தான் எங்களுடைய சந்திப்பு இருக்கும். சாதுர்யன் என்ற படத்தில்தான் முதன் முதலாக இவளை சந்தித்தேன். அப்போதே என்னுடைய மனது, இவளை பார்க்காதே.. பார்க்காதே என்று சொல்லிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் திடீரென்று என்னை அழைத்த இயக்குநர், இவளை என்னி...