இந்தியா, பிப்ரவரி 9 -- Manipur CM Biren Singh Resigns: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், அவரது ராஜிநாமா வந்துள்ளது. அவர் ஞாயிற்றுக்கிழமை மாநிலத் தலைநகர் இம்பாலில் மாநில ஆளுநரை சந்தித்த பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் பிரேன் சிங் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட ஆலோசனையை மேற்கொண்டார், அதன் பிறகு அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....