இந்தியா, பிப்ரவரி 13 -- Manipur: மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பைரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு,

பிப்ரவரி 13ஆம் தேதியான இன்று மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இனக் கலவரத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 21 மாதங்களுக்குப் பின், பைரேன் சிங் ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசியல் சாசன விதிகளின்படி அந்த மணிப்பூர் மாநில அரசை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது" என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,"இப்போது, அரசியலமைப்பின் 356ஆவது பிரிவால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், அது தொடர்பாக எனக்கு அதிகாரம் அளிக்கும் பிற அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி, மணிப்பூர...