இந்தியா, ஜனவரி 28 -- தமிழ் சினிமாவை கோலிவுட் என்று சினமாக்காரர்கள் அழைத்து வரும் நிலையில், தமிழ் சினிமாக்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களின் வாழ்வியலையும் அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டுடன் இணைந்து இருக்கும் யுனியன் பிரதேசமான புதுச்சேரி பிரஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும், அங்கும் தமிழர்கள் அதிகமாக வசிப்பதால் அந்த பகுதியினரிடம் எந்த வித்தியாசமும் தமிழர்கள் பார்ப்பதில்லை.

அந்த வகையில், புதுச்சேரி பின்னணியில், அம்மாநில கலைஞர்கள் மட்டும் நடித்து முதல் முறையாக 'மனிதம்' என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை யுவர் பேக்கர்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் சார்பில் கிருஷ்ண ராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

மதுநிகா ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜே புருனோ சாவியோ இயக்கியுள்ளார்...