இந்தியா, ஏப்ரல் 19 -- மணத்தக்காளி கீரை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். உங்கள் சருமம் மற்றும் தலைமுடியில் வயோதிகத்தை விரைவுப்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்கள்களை அழிக்கும். ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது.

மணத்தக்காளியில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் நிறைந்துள்ளது. இது கீமோதெரபி மூலமே புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆனால் நிறைய மூலிகைகளை புற்றுநோயை தடுக்கிறது. அதில் மணத்தக்காளியும் ஒன்று. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. வாய்ப்புற்று மற்றும் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

மணத்தக்காளி, நீரிழிவு நோயாளிகளுக்கு பாரம்பரியமான மருந்து மற்றும் உணவு என்றே கூறலாம். இது ஆய்வுகளின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்...