இந்தியா, பிப்ரவரி 7 -- மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. அதில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் 54/25 த.பெ ஜெயரமான், காந்தி நகர், மணப்பாறை என்பவர் மேற்படி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவி 9/25 என்பவரிட...