இந்தியா, பிப்ரவரி 11 -- Mahizh thirumani: விடாமுயற்சி திரைப்படத்தில் கயல் (த்ரிஷா) பிரகாஷ் என்பவரை காதலிப்பதாகவும், அதன் காரணமாக அவர் அர்ஜூனை (அஜித்) பிரிய முடிவெடுத்து விட்டதாகவும் காண்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால், படத்தில் கடைசி வரை யார் அந்த பிரகாஷ் என்று சொல்லப்பட்டு இருக்காது. அது ஏன் என்பதற்கான காரணம் குறித்து மகிழ்திருமேனி சினி உலகம் யூடியூப் சேனலுக்க்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் விளக்கி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் கொடூரமாக காட்டப்பட்ட இரண்டு வில்லன்களுக்கு இடையிலான உறவை அந்தப்படத்தின் இயக்குநர் கௌதம் சார் பெரிதாக வரையறுக்கவில்லை; ஆனால், படத்தின் ரிலீசுக்கு பிறகு அது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. ஆனால், கௌதம் சார் அதை ஓப்பன் எண்ட்டாக இருக்கட்டும் என்று கூறிதான் வைத்தார்....