இந்தியா, பிப்ரவரி 13 -- Mahashivratri 2025 Rasis: நமது நாடு முழுவதும் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. உலகமெங்கும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது.

குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

சிவபெருமானுக்கு மிகவும் விசேஷ நாளாக மகாசிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய திருநாள் அனைவரும் இரவு நேரங்களில் வழிபாடு செய்து சிவபெருமானின் அருளை பெறுவதா...