உத்தர பிரதேசம்,பிரயாக்ராஜ்,சென்னை, பிப்ரவரி 10 -- உத்தரப் பிரதேசத்தின் பிரயாகராஜில் நடைபெறும் மகா கும்ப மேளாவுக்குச் செல்லும் வழியில், 300 கிலோமீட்டர் வரை நீண்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. லட்சக்கணக்கான புனித யாத்ரீகர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் வாகனங்களில் மேளாவுக்கு வருகை தந்ததால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் சிக்கித் தவித்தனர்.

இந்த போக்குவரத்து நெரிசலை இணையவாசிகள் "உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்" என்று அழைத்து பதிவுகளை வெளியிட்டனர். இது முன்னெப்போதும் இல்லாத நெரிசல், மத்தியப் பிரதேசம் வழியாக மகா கும்ப மேளாவுக்குச் செல்லும் யாத்ரீகர்களின் வாகனங்களை உள்ளடக்கி, சுமார் 200-300 கி.மீ வரை நீண்டிருந்ததால், ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தினர், இதனால் மக்கள் பல மணி நேரம் சாலைகளில்...