இந்தியா, ஜனவரி 29 -- அஜித்தின் அர்ப்பணிப்பு குறித்து மகிழ்திருமேனி டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசினார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'அஜித்திற்கு சமுதாய பொறுப்பு மிக மிக அதிகம். அவர் இந்த சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு பல விஷயங்களில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான மனப் போக்கு.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தான ஆழ்ந்த கவலை அவருக்கு இருந்ததுதான், 'நேர்கொண்ட பார்வை' படத்தை அவரை செய்ய வைத்தது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை அவர் போன்ற ஒரு மாஸ் ஹீரோ செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.

'விடாமுயற்சி' திரைப்படத்தில் அவரது இமேஜ் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றுதான் நடித்திருக்கிறார்; காரணம் என்னவென்றால் இந்த படத்தில் அவருக்கு பெரிய இண்ட்ர...