இந்தியா, பிப்ரவரி 5 -- Magizh Thirumeni: 'விடாமுயற்சி' படத்தில் இடம்பெற்ற அஜித்தின் ப்ளாக் ஹேர் லுக் பற்றியும், அஜித் அதனை அணுகிய விதம் குறித்தும் இயக்குநர் மகிழ் திருமேனி ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'படத்தில் ஏறக்குறைய அஜித் நான்கு காலகட்டங்களில் வருகிறார். அதில், 12 வருடங்களுக்கு முன்பான அஜித், 9 வருடங்களுக்கு முன்பான அஜித், 6 வருடங்களுக்கு முன்பான ஒரு அஜித், தற்போது இருக்கும் அஜித் என 4 லுக்குகள் இருக்கின்றன. இந்த நான்கு காலகட்டங்களும் படத்தினுடைய துவக்கத்திலேயே வந்து விடும்.

படத்தினுடைய முழு கதையையும் அஜித் சார் முன்பே கேட்டு விட்டதால், அவருக்கு இந்தந்த காலகட்டங்கள் இருக்கின்றன. அதற்கு இவ்வாறான தோற்ற அமைப்புகள் தேவை என்பது நன்றாகவே தெரியும். அதைப்பற்றி நானும், அவரும் நிறைய பேசினோம். ...