இந்தியா, மே 13 -- கேது பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான மகம் நட்சத்திரம் சூரியனின் ராசியான சிம்ம ராசியில் உள்ளது.

ஞானகாரகனான கேதுவின் நட்சத்திரமாக மகம் உள்ளது. ஆத்மகாரகனான சூரியனின் ராசியாக சிம்மம் உள்ளது.

அதாவது ஆத்மா ஞானத்துடன் கலக்கும் நிகழ்வு மகம் நட்சத்திரக்காரர்களுக்கு இயற்கையிலேயே உள்ளது.

பெருந்தன்மை குணம் கொண்ட இவர்களுக்கு எதனை பற்றியும் தனிப்பட்ட அக்கரை இருக்காது. சமுதாய நோக்கம் கொண்ட இவர்களுக்கு இசையில் அதிக நாட்டம் இருக்கும்.

கடவுள் மீதான பயம் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். நினைத்ததை முடிக்கக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

'மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்' என்ற பழமொழி உண்டு. அதாவது ஆளுமை கொண்ட கிரமாக சூரியனும், ஞானம் பெற்ற கேதுவும் சேரும்போது ராஜாவாக வாழ முடியும் என்பது இதற்கு பொருளாகும்.

பூக்கள், மரம்,செடி...