இந்தியா, ஜனவரி 26 -- டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், டங்ஸ்டன் சுரங்க அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரியும், நரசிங்கம்பட்டி முதல் மதுரை வரை கடந்த ஜனவரி 7ஆம் தேதி அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நடைபயணமாக சென்றனர்.

தமிழகத்தின் முதல் பல்லுயிர் மரபுச் சின்னமான அரிட்டாபட்டிக்கு அருகில் உள்ள 10 கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை மத்திய சுரங்க அமைச்சகம் நவம்பர் 7ஆம் தேதி வழங்கியதை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவில் உள்ள பல கிராமங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய சுரங்க அமைச்சகத்திற்கு தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் நவம்பர் 29 அன்று கடிதம் எழுதியிருந்தார். சம்பந்த...