மதுரை,மதுரை புதூர்,கன்னியாகுமரி,விருதுநகர், ஏப்ரல் 8 -- குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், இரு மடங்கு லாபம் எனக்கூறி 1500 நபர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மதுரை புதூர் காவல் நிலைய காவலர் மற்றும் அவரது மனைவி மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க | சிறைக் கைதிகள் சந்திக்கும் பிரச்னைகள்: தலைமை செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஹரிணி ஆறுமுகம் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர், புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா. இவர்கள் இருவரும் QUEEN டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், இருமடங்கு லாபம் தருவதாக கூறி தங்க விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தியதாக கூறப்ப...