இந்தியா, மார்ச் 5 -- Madhampatti Rangaraj: தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கேட்டரிங் தொழிலதிபரும் நடிகருமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் கேட்டரிங் பிசினஸ் மூலம் சினிமாக்காரர்களுக்கு அறிமுகம் ஆகி இருந்தாலும், பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இவர் மெஹந்தி சர்க்கஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

80,90களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் வெளியான சமயத்தில், படத்தின் அத்தனை பாடல்களும் மெகாஹிட் அடிக்க, மாதம்பட்டி ரங்கராஜ் ஒவ்வொரு வீட்டில் உள்ளோராலும் அறியப்பட்டார்.

இதையடுத்து, அவர் நடந்து முடிந்த விஜய் டிவியின் குக் வித் கோமாளி தொடரின் நடுவர்களில் ஒருவராக பங்கேற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பரிட்சையமானார். நிலைமை இப்படி இருக்க, ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான மாதம்பட்டி ரங்கராஜ், வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவ...