இந்தியா, ஏப்ரல் 6 -- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்த அறிவிப்பை கட்சி மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து மத்தியக் குழு உறுப்பினர்களாக கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம், என்.குணசேகரன், கே.பாலபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ உறுப்பினரும், கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதியுமான எம்.ஏ. பேபியின் முழு பெயர் மரியம் அலெக்ஸாண்டர் பேபி என்பதாகும்.

1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம...