சென்னை,chennai, பிப்ரவரி 19 -- சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 712 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

சென்னை புளியந்தோப்பில் 712 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "வடசென்னையை வளர்ச்சி சென்னையாக கொண்டு வந்துள்ளோம். தென்சென்னை மத்திய சென்னை எப்படி வளர்ந்து இருக்கிறதோ அதை விட பெரிதாக வடசென்னை வரவேண்டும் என்று அரசு பல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது.

வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.6400 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.1000 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 29 மா...