இந்தியா, பிப்ரவரி 6 -- தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும், இந்திய பெர்பார்மிங் ரைட்ஸ் சொசைட்டி இயக்குநராகவும், தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் தலைவராகவும் பதவி வகித்தவர் கவிஞர் பிறைசூடன். மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இவரை கவிஞானி என்ற அழைத்து போற்றினார். பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களாலும், மேடை பேச்சுகளாலும் கவனம் ஈரத்தவராக இருந்து வரும் இவர் தமிழ் சினிமாக்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

இசை மும்மூர்த்திகளில் ஒருவராகவும், கர்நாடக சங்கீதத்தின் கீர்த்தனைகளை உருவாக்கியவருமான தியாகராஜர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, ஜகம் பழகும் என்ற கார்நாடக பாடலை உருவாக்கியுள்ளார்.

மறைந்த இயக்குநர் பாலசந்தருக்கு அடுத்தபடியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் இருந்து தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவராக இரு...