இந்தியா, ஏப்ரல் 11 -- Lucky Zodiac Signs: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் சிறப்பு பண்புகள் உள்ளன. இதனிடையே சில ராசிகளைச் சேர்ந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தேடி கொடுப்பார்கள். குறிப்பாக கணவரின் நிதி சிக்கல்கள் தீர்க்கப்படும். கணவன் வாழ்க்கையில் நுழையும் போது செல்வத்தைக் கொண்டு வருகிறார்கள். என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்..

ரிஷப ராசி கொண்ட பெண்கள் தங்கள் கணவர்களுக்கு செல்வத்தின் அடிப்படையில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவார்கள். இந்த ராசி சுக்கிரனால் ஆளப்படுகிறது. ரிஷப ராசி பெண்கள் தங்கள் கணவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவார்கள். கணவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். இந்த ராசிப் பெண்கள் எங்கு பணத்தைச் செலவிட வேண்டும், எங்கு செலவிடக்கூடாது என்பதை நன்கு அறிவார்...