இந்தியா, ஜனவரி 27 -- Lucky Colors: ஜோதிடத்தில் நிறங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ஏழு கிரகங்களால் ஆளப்படுவதாக வான் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் அந்தந்த கோள்களுக்கான பிரத்யேக நிறங்களில் ஆடை அணிவது, நல்லவை நடக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.

உங்கள் ராசி, பிறந்த நட்சத்திரம், பிறந்த தேதி ஆகியவற்றைப் பொறுத்து அதிர்ஷ்ட நிறமானது மாறும் என்றாலும் ஏழு நாட்களுக்கும் உரிய இந்த 7 நிறங்களும் அனைவரும் அணிவதற்கு ஏற்றது. இந்த நிற ஆடைகளை நீங்கள் அணிந்தால், உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நேர்மறையாக இருக்கும். ஜோதிடத்தின் படி, திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை எந்தெந்த நிற ஆடைகளை அணிய வேண்டும், எந்த நிறங்களை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

ஜோதிடத்தின் படி, திங்கட்கி...