இந்தியா, மார்ச் 23 -- Luck Rasis: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சனி பகவான் ஒரு பாவ கிரகம் மற்றும் ஒரு கொடூரமான கிரகம் என்று அழைக்கப்படுகிறார்.

ஜோதிடத்தில் சனி பகவானின் மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவான் 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாற்றிக் கொள்கிறார்.

அதன்படி, வரும் மார்ச் 29ஆம் தேதியன்று, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட கணக்குகளின்படி, சனி பகவானின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சில ராசிக்காரர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பெற்ற துன்பங்கள் அனைத்தும் குறையும். கருத்து வேற்றுமைகளால் பிரிந்த கணவன் - மனைவிமார்கள் சேர்வார்கள். நிச்சயம் சிலர் இழந்த பணத்தை மீட்பர். கெட்ட பெயர் நீங்கி நல்ல பெயர் ...