இந்தியா, ஏப்ரல் 1 -- வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், தற்போது ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு இன்று (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்க...