இந்தியா, பிப்ரவரி 4 -- கர்ணன் படத்தில் நடிகர் தனுஷூடன் நடித்த நடிகை ஒளிப்பதிவாளர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், பெரும்பாறா கிராமத்தைச் சார்ந்தவர், ரஜிஷா விஜயன். ஆரம்பத்தில் சூர்யா டிவி மற்றும் மழவில் மனோரமா டிவியில் தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரஜிஷா விஜயன், ''அனுராக கரிக்கின் வெல்லம்''என்னும் படத்தின் மூலம் மலையாளத்திரையுலகில் அறிமுகம் ஆனார். தனது முதல் படத்திலேயே மாநில அரசின் சிறந்த நடிகை விருதையும் பெற்றார். பின், ஜூன், ஃபைனல்ஸ், லவ் ஆகிய மலையாளப் படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானார். குறிப்பாக, இவர் நடித்த ஜூன் படம் வெகுவாகப் பலரால் கவனிக்கப்பட்டது.

அதன்பின், முதல்முறையாக, 2020ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' படத்தில் நடிகையாக தமிழில் அற...