இந்தியா, ஏப்ரல் 15 -- டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஏப்ரல் 14 நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கம் முன்னெடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் குறித்து பேசிய அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முக...